மணலி புதுநகரில் கன்டெய்னர் யார்டு மேலாளரை கொலை செய்த 5 பேர் கைது

1 month ago 4

திருவொற்றியூர்: ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியைச் சேர்ந்தவர் சாய்பிரசாந்த் (45). மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல் சாவடியில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் யார்டில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது குடும்பம் ஆந்திராவில் உள்ளது. கன்டெய்னர் யார்டில் உள்ள அறையில் தங்கியிருந்து சாய் பிரசாந்த் பணிகளை கவனித்து வந்தார். இங்கு ஆந்திராவைச் சேர்ந்த பாலாஜி (25), ஷியாம் (28), சாய்சாரதி (32) மற்றும் 15க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கன்டெய்னர் பெட்டிகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஊழியரான பாலாஜி முன் அனுமதி இல்லாமல் குறித்த நேரத்தை விட முன்னதாகவே பணியில் இருந்து சென்றுவிட்டார். இதனால் பாலாஜியை மேனேஜர் சாய் பிரசாந்த் வேலையை விட்டு நிறுத்திவிட்டார். எனவே, ஆத்திரமடைந்த பாலாஜி சம்பவத்தன்று இரவு சக நண்பர்கள் ஷியாம், சாய்சாரதி, முகிலன் (30), மணிமாறன் (20) ஆகியோருடன் வந்து ராடு மற்றும் இரும்பு ஆயுதங்களை கொண்டு, சாய்பிரசாந்த் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை சரமாரியாக தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பினர்.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தப்பி ஓடிய பாலாஜி, ஷியாம், சாய்சாரதி, இவர்களது நண்பர்கள் முகிலன், மணிமாறன் ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மணலி புதுநகரில் கன்டெய்னர் யார்டு மேலாளரை கொலை செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article