மேட்டூர்: காவிரி உபரிநீர் மூலம், சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்ததற்காக, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள் சார்பில் மேச்சேரியில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எம்எல்ஏ, எம்பி, முதலமைச்சராக இருந்த போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி தான், வாழ்நாளில் பெற்ற பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நான் முதலமைச்சரான பின்னர், இந்த திட்டம் செயல் வடிவம் பெற்றது.
காவிரி நீருக்காக எப்போதும் கர்நாடகத்தை எதிர்பார்க்க கூடாது. இதற்காக கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று, பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இதற்காக மத்திய அரசும் இசைவு தெரிவித்தது. இதற்காக தெலங்கானா முதல்வரை சந்தித்து ஆதரவும் கேட்டோம். அவர் ஆதரவு தெரிவித்தார். ஆந்திர முதலமைச்சரும் ஆதரவு தெரிவித்தார். ஆனால், அதை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ரெய்டை கண்டு நான் எப்போதும் பயப்படவில்லை. மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. துணிவோடு எதையும் எதிர் கொள்ளும் சக்தி அதிமுகவினருக்கு உண்டு. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
The post மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை: ரெய்டு குறித்து எடப்பாடி பேச்சு appeared first on Dinakaran.