மடக்கிப் பிடித்த போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று கொள்ளையர்களின் கார் லாரி மீது மோதி விபத்து

12 hours ago 1

* டிரைவர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

* கொடைரோடு டோல்கேட்டில் பரபரப்பு

நிலக்கோட்டை : கொடைரோடு சுங்கச்சாவடியில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற கொள்ளையர்களின் கார், லாரியில் மோதி விபத்திற்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் – மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்கச்சாவடியில் நேற்று காலை திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த 2 சொகுசு கார்களை தனிப்படை போலீசார் சோதனை ெசய்தனர். காரில் இருந்தவர்களிடம் விசாரிக்க முயன்றபோது, 2 கார்களும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றது.

சுதாரித்த போலீசார் ஒரு காரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து மடக்கினர். மற்றொரு காரில் வந்தவர்கள் எதிர்சாலையில் வளைத்து, அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது, அந்த கார் சாலையின் தடுப்பில் மோதி எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த காரை ஓட்டி வந்த சுபாஷ் சந்திரபோஸை போலீசார் மடக்கினர். உடனே அவர், தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுபாஷ் சந்திரபோஸை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 2 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்டவர்களை அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முகம்மது சாலியபுரம் 1வது தெருவைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் முகம்மது சையது சுலைமான் என்பவரது வீட்டில், கடந்த 8ம் தேதி 50 பவுன் நகை மற்றும் ரூ.26 லட்சம் பணம் திருடிய கொள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது.கொடைரோடு சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மடக்கிப் பிடித்த போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று கொள்ளையர்களின் கார் லாரி மீது மோதி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article