'மஞ்சுமெல் பாய்ஸ்'-க்கு சர்வதேச அங்கீகாரம்

3 months ago 34

சென்னை,

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'.இது உலகளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 'மஞ்சுமெல் பாய்ஸ்'-க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.ரஷியாவில் நேற்று துவங்கிய கினோபிராவோ திரைப்பட விழா அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நாளை மற்றும் வரும் 1-ம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் படம் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற உள்ளது.

Read Entire Article