'மஞ்சள் வீரன்' - டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ்

3 months ago 23

சென்னை,

பைக்கில் பயணம் செய்து அதனை யூடியூபில் வீடியோவாக போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் 'மஞ்சள் வீரன்'. இந்த படத்தை செல் அம் இயக்க இருந்தார். இவர் ஏற்கனவே 'திருவிக பூங்கா' என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி வைரலானது.

இந்தநிலையில், 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும் , பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார். படத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக செல் அம் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து டிடிஎப் வாசன், என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது, மேலும் இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், 'மஞ்சள் வீரன்' படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது. நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது. 

TTF வாசனை தூக்கிவிட்டு Cool சுரேஷ்..!பூஜை போட்டதும்.. கோஷம் போட்ட Hero.!"Wait And See" நியூ அப்டேட்#thanthitv #ttf #ttfvasan pic.twitter.com/CtpmlILd8u

— Thanthi TV (@ThanthiTV) October 14, 2024
Read Entire Article