மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் கோரி காய்ந்த பயிர்களுடன் ஆர்ப்பாட்டம்

3 months ago 9

பெரம்பலூர்,பிப்.6: மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணமும் பயிர் காப்பீட்டு தொகையும் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் காய்ந்த மக்காச்சோள சருகுகளுடன் திரண்டு வந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு 50க்கும் மேற்பட்டோர் காய்ந்த மக்காச்சோள சருகுகளுடன் திரண்டு வந்து, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறுவர் பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தின் தலைவர் பூ. விசுவநாதன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஹெக்டேர் பரப் பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுஇருக்கிறது. இதில் 61 ஆயிரம் லிட்டர் மக்காச்சோளம் இன்சூ ரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டமக்காச்சோள சாகுபடியாளர்களுக்கும் சின்ன வெங்காயம் விவசா யிகளுக்கும் மரவள்ளி மற்றும் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகையினையும் பயிர் காப்பீட்டு தொகையையும் பெற்று தர வேண்டும். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, மாவட்ட கலெக்டர் உடனடியாக ஆய்வு செய்து இது தொடர்பாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

The post மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் கோரி காய்ந்த பயிர்களுடன் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article