மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை

11 hours ago 2

சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஒடிசாவில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை நிகழ்த்தினார். அதில் பேசிய அவர்,”மாநிலங்களின் ஜனநாயக உரிமையை காப்பதற்கான மிக முக்கியமான கூட்டம் இது. நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்; மக்கள் தொகையை நாம் கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதித்திருக்கும். மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்கக் கூடாது.

மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது. இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது. சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 20. 26 மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், மக்களவை – சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து ஆலோசித்த பிறகே ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பை நடத்த வேண்டும். ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதளம் போராடும்”, இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை appeared first on Dinakaran.

Read Entire Article