மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

4 weeks ago 4

 

பெரம்பலூர், டிச. 17: பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய ஆட்டோக்களுக்கு சி.என்.ஜி அனுமதி வழங்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட 3+1 ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட 3+1 ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் (தொ.மு.ச) மாவட்ட பொதுச் செயலாளர் செல்லதுரை தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் தெருவித்திருப்பதாவது: தற்பொழுது பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு பர்மிட் தருவதாக அறிந்தோம். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆட்டோக்கள் அதிகமாக இருக்கின்றன. அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிப்பதாலும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆட்டோக்களுக்கு சிஎன்ஜி ஆட்டோ பர்மிட் மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article