டெல்லி: காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை வீடுகளில் அப்படியே வைத்திருக்க கூடாது என்றும் அவற்றை பாதுகாப்பான முறையில் உடனுக்குடன் அகற்ற வேண்டும் என மத்திய மருந்துகட்டுப்பாடு ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது போன்று விரைந்து அகற்ற வேண்டிய 17 மருந்துகள் பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஃபென்டானில், ட்ரமடால், டாயஸ்பேம் உள்ளிட்ட மருந்துகளை காலாவதியான பின் உட்கொண்டாலோ அல்லது உடல் நலமுடன் உள்ள வேறு ஒரு நபர் தவறுதலாக எடுத்துக்கொண்டாலோ கடும் பாதிப்புகள் ஏற்படும் என சிடிஎஸ்கோ கூறியுள்ளது. இது போன்ற மருந்துகளை வீடுகளில் கை கழுவ பயன்படுத்தும் சிங்க்குகள், கழிவறை கோப்பைகளில் ஊற்றி அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை பொதுமக்களிடம் இருந்து திரும்பப்பெறும் திட்டத்தை மாநில அரசுகள் செயல்படத்தலாம் என்றும் கூறியுள்ளது.
The post மக்களே உஷார்.. காலாவதியான மருந்துகளை வீடுகளில் அப்படியே வைத்திருக்க கூடாது: CDSCO அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.