'மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை'- பார்வதி நாயர்

2 hours ago 2

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத்தொடர்ந்து, தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், சினிமாவில் பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்தது தனது அதிர்ஷ்டம் என்று பார்வதி நாயர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'தென்னிந்திய சினிமாவில் சில பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. நான் பணிபுரிந்த முதல் பெரிய நட்சத்திரம் அஜித் சார். அவருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் பதற்றமாக இருந்தது, இருந்தபோதும் அனுபவம் அருமையாக இருந்தது.

ஒரு நடிகருக்கோ அல்லது நடிகைக்கோ எல்லா விஷயங்களும் சாதகமாக நடக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் திறமையானவராக இருந்தாலும், அதிர்ஷ்டம் ஒரு பெரிய பங்கு வகிக்கும் என்பதை புரிந்துகொண்டேன். மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன்' என்றார்.

Read Entire Article