மகிந்திரா நிறுவனம் எக்ஸ்யுவி 700 இபோனி எடிஷன் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 200 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதுபோல், டீசல் இன்ஜினும் உள்ளது. இதிலுள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 185 எச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
இபோனி எடிஷன் என்ற பெயருக்கேற்ப, முழுக்க முழுக்க பளபளப்பான கருப்பு வண்ணத்தில் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இபோனி பேச்ட் பதிக்கப்பட்டுள்ளது. பம்பர்களில் உள்ள ஸ்கப் பிளேட்டுகள் சில்வர் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறமும் கருப்பு வண்ண தீமில் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், ரூஃப் லைனர்கள் சாம்பல் நிறத்தில் இடம் பெற்றுள்ளது.
லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு அம்சம், தானியங்கி ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, 7 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஏஎக்ஸ்7, ஏஎக்ஸ் எல் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. இதற்கேற்ப சில அம்சங்கள் மாறுபடும்.
துவக்க ஷோரூம் விலையாக ஏஎக்ஸ்7 பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.19.64 லட்சம், டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.20.14 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏஎக்ஸ்7எல் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.23.32 லட்சம், டீசல் மேனுவல் சுமார் ரூ.22.39 லட்சம், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.24.14 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post மகிந்திரா எக்ஸ்யுவி 700 இபோனி எடிஷன் appeared first on Dinakaran.