மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

2 months ago 19
மகாராஷ்டிராவில் 11 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். புனே மெட்ரோ ரயில் திட்டத்தில், மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஸ்வர்கேட் வரை ஆயிரத்து 810 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சுரங்க மெட்ரோ ரயில் திட்டம், 2 ஆயிரத்து 955 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வர்கேட் முதல் கத்ரஜ் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட நீட்டிப்புக்கான கட்டுமானப் பணிகளை அவர் தொடங்கிவைத்தார். சோலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, சத்ரபதி சாம்பாஜி நகர் அருகே, ஆறாயிரத்து 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஏழாயிரத்து 855 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிட்கின் தொழிற்பேட்டையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிடேவாடாவில் சாவித்ரிபாய் புலேயின் முதல் பெண்கள் பள்ளிக்கான நினைவிடத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
Read Entire Article