கன்னியாகுமரி, அக். 5: காந்தி ஜயந்தியை முன்னிட்டு மகாராஜபுரம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனிகுமார், வார்டு உறுப்பினர் அனீஸ்வரி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீனம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கூட்டம் நடைபெற்ற போது மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாடான்குளத்தினுள் உள்ள குடிநீர் கிணற்றை சுத்தம் செய்ய வேண்டும். கிணற்றைச் சுற்றிலும் பராமரிப்பின்றி உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென கோஷம் எழுப்பினர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்புத் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
The post மகாராஜபுரம் கிராமசபைக் கூட்டம் appeared first on Dinakaran.