வத்திராயிருப்பு, பிப்.10: மகாராஜபுரம் ஊராட்சியில் மிக மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் வத்திராயிருப்பு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நேற்று தம்பிபட்டியில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் அஹமது காசிம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயளாலர் முஜிப் ரஹ்மான் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் முஹம்மது சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு முஸ்லிம் தெரு மற்றும் பணத்தோட்டம் பகுதியில் வடிகால் மற்றும் சாலை வசதிகள் மிக மோசமாக உள்ளதால் அதை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், வக்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது, எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் தம்பிபட்டி கிளை தலைவர் சேக்பரீத் நன்றியுரை கூறினார்.
The post மகாராஜபுரம் ஊராட்சியில் சாலையை சீரமைக்க வேண்டும்: எஸ்டிபிஐ கோரிக்கை appeared first on Dinakaran.