நெல்லை, ஜன. 14: நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் தலைமையில் நெல்லை மகாராஜாநகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மகளிர்கள் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் ரூபி மனோகரன் எம்எல்ஏ பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, மாநில மனித உரிமை ஆணைய துணை தலைவர் விவேக் முருகன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மகாராஜநகர் எம்எல்ஏ அலுவலகத்தில் ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.