மகாத்மாவின் அகிம்சையை ஆதரிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்: ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல்

4 months ago 24

நியூயார்க்: தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் ஐநாவுக்கான இந்திய தூதரகம் காந்தியின் மதிப்புக்கள் மற்றும் ஐநா சாசனம் என்ற தலைப்பில் ஐநா தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பேசியதாவது: உலகம் இன்று வன்முறையால் துடித்துக்கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. உக்ரைனில் இருந்து சூடான், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் வறுமை மற்றும் பயத்தை போர் உருவாக்குகிறது அகிம்சையே மனித குலத்திற்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய சக்தி என்றும், எந்த ஆயுதத்தைவிடவும் சக்திவாய்ந்தது என்றும் காந்தி நம்பினார். அந்த உன்னதமான பார்வையை ஆதரிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நிறுவனங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மகாத்மாவின் அகிம்சையை ஆதரிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்: ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article