மகா கும்பமேளா: திருவனந்தபுரம் - பனாரஸ் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

17 hours ago 2

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதையொட்டி திருவனந்தபுரம்-பனாரஸ் இடையே கோவை வழியாக சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் திருவனந்தபுரம்- பனாரஸ் சிறப்பு ரெயில் (எண்:-06007) வியாழக்கிழமையன்று இரவு 9.50 மணிக்கு பனாரஸ் நிலையத்தைசென்றடையும்.

மறுமார்க்கத்தில், 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு பனாரசில் இருந்து புறப்படும் பனாரஸ்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (எண்:- 06008) ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 11.55 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

இந்த ரெயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், ஜபல்பூர்,பாட்னா, மானிக்பூர், மிர்ஷாபூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article