மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்த பணம் இல்லாததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

4 hours ago 3

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் முல்லைநகர் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 55). விவசாயியான இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகானந்தம் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற இருந்தது. திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்த செலவுக்கு பணம் இல்லாததால் முருகானந்தம் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் முருகானந்தம் வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவை நடத்த பணம் இல்லாததால் மன உளைச்சலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article