மகளிர் விடியல் பயணம் திட்டம் மகத்தான திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

7 months ago 17

அரியலூர்: உழைக்கும் மகளிருக்கு உறுதுணையாகவும் அவர்களுக்கு பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கும் திட்டம் விடியல் பயணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான மகத்தான திட்டம் விடியல் பயணம் திட்டம். தீபாவளிக்கு சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பான பேருந்து வசதியை செய்து தந்தவர் அமைச்சர் சிவசங்கர். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு கலைஞர் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர். 15,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிசெய்யும் காலணி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காலணி தொழிற்சாலையால் ஜெயங்கொண்டத்தில் பொருளாதார நிலை உயரும் என்றும் கூறினார்.

The post மகளிர் விடியல் பயணம் திட்டம் மகத்தான திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article