
பெங்களூரு,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்டிகா பாடியா மற்றும் ஹேலி மேத்யூஸ் களம் இறங்கினர். இதில் யாஷ்டிகா பாடியா 11 ரன்னிலும், ஹேலி மேத்யூஸ் 22 ரன்னிலும், அடுத்து வந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 18 ரன்னிலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னிலும், சஜீவன் சஜனா 5 ரன்னிலும், அமெலியா கெர் 17 ரன்னிலும் அவுட் ஆகினர்.தொடர்ந்து அமன்ஜோத் கவுர் மற்றும் கமலினி ஜோடி சேர்ந்தனர். இதில் கமலினி 1 ரன்னிலும், அடுத்து வந்த சன்ஸ்கிரிடி குப்தா 3 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 22 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனசென், மின்னு மணி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 124 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி விளையாடியது.
தொடக்கம் முதல் மெக் லேனிங், ஷாபாலி வர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர் . ஷபாலி வர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய மெக் லேனிங் அரைசதம் அடித்தார் . இறுதியில் 14.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.