மகளிர் பிரீமியர் லீக்: புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

3 hours ago 1

பெங்களூரு,

மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன.

இந்த தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் அடுத்த மாதம் 15-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் தற்போது வரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. அதில் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 2 வெற்றி பெற்றுள்ள நிலையில், ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்திலும், மும்பை 2-வது இடத்திலும், டெல்லி 3-வது இடத்திலும் உள்ளன. உ.பி.வாரியர்ஸ் 4-வது இடத்திலும், குஜராத் கடைசி இடத்திலும் உள்ளன. 

After Match 8️⃣ of #TATAWPL, defending champions @RCBTweets continue being on the of the Points Table Which teams will earn the 'Q' pic.twitter.com/nbi7gWJF1U

— Women's Premier League (WPL) (@wplt20) February 22, 2025
Read Entire Article