மகளிர் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு

6 months ago 24

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

டி20 போட்டிகள் அனைத்தும் நவி மும்பையிலும், ஒருநாள் போட்டிகள் அனைத்து வதோதராவிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கவு கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய டி20 அணி விவரம்; ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), நந்தினி காஷ்யப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, சஜனா சஜீவன், ராக்வி பிஸ்ட், ரேனுகா சிங் தாக்கூர், பிரியா மிஷ்ரா, டைட்டஸ் சாது, சைமா தாகோர், மின்னு மணி, ராதா யாதவ்.

ஒருநாள் அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹார்லீன் தியோல், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), தேஜல் ஹஸ்பனிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி, பிரியா மிஷ்ரா, தனுஜா கன்வார், டைட்டஸ் சாது, சைமா தாகோர், ரேனுகா சிங் தாக்கூர்.


NEWS

India's squad for IDFC First Bank T20I & ODI series against West Indies announced.

All The Details #TeamIndia | #INDvWI https://t.co/2Vf8Qbix76

— BCCI Women (@BCCIWomen) December 13, 2024

Read Entire Article