மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி

3 months ago 24

வெல்லிங்டன்,

9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள் ளன. 'லீக்' சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோல்வி கண்டட்து. நேற்று நடந்த 2வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

20-ந் தேதியுடன் உலகக் கோப்பை தொடர் முடிவடைகிறது. இதனையடுத்து அக்டோபர் 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் 2022-25 ஐ.சி.சி மகளிர் ஒருநாள் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article