மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி

2 hours ago 2

ராஜ்கிர்,

8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே மலேசியா, தென் கொரியா மற்றும் தாய்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருந்தது.

இதனையடுத்து இந்தியா தனது 4-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீன அணியை இன்று எதிர்கொண்டது. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

பிற்பாதி ஆட்டத்தில் இந்திய அணி தனது வேகத்தை அதிகரித்து 3 கோல்கள் அடித்தது. ஆனால் சீனாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்தியா தரப்பில் சங்கீதா குமாரி, சலிமா டெடெ மற்றும் தீபிகா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதியையும் உறுதி செய்துள்ளது. 

Full-Time! Team India extends their dominance at the Bihar Women's Asian Champions Trophy Rajgir 2024, defeating China 3-0 with a sensational display of skill and teamwork! The defending champions are on fire, climbing to the top of the table and securing their place… pic.twitter.com/zx5DJPbvQx

— Hockey India (@TheHockeyIndia) November 16, 2024
Read Entire Article