காந்திநகர்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல், வட இந்தியாவில் இன்றைய தினம் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெற்றன. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களுடன் இணைந்து அமித்ஷா பட்டம் விட்டு மகிழ்ந்தார்.