
சென்னை,
மெர்சல் படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான்' பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானவர் பாடலாசிரியர் விவேக். சர்கார், பிகில், 144, மாலை நேரத்து மயக்கம், மேற்கு தொடர்ச்சி மலை, ஒருநாள் கூத்து, இறுதிசுற்று, போக்கிரி ராஜா, அரண்மனை-2 உள்பட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படத்தில் விவேக் எழுதிய 'வாடி ராசாத்தி' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் விவேக் எழுதிய மட்ட பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது ரெட்ரோ படத்தில் விவேக் எழுதிய கனிமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில், தன்னுடைய 10வது திருமண நாளில், தனக்கு மகன் பிறந்திருப்பதை பாடலாசிரியர் விவேக் அறிவித்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவேக் பகிர்ந்துள்ளார்.