போலீஸ் விசாரணைக்கு பயந்து பிரேஸ்லெட் விழுங்கிய ரவுடி

3 months ago 25

அம்பத்தூர்: அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் விக்கி (27), சரித்திர பதிவேடு குற்றவாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரவுடி பிரியாணி கார்த்திக் (24), அபிமன்யு (27) ஆகியோரை அமந்தகரை போலீசார் நேற்று முன்தினம் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அப்போது, போலீசாரின் விசாரணைக்கு பயந்த விக்கி, கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டை கழட்டி விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஆபரேஷன் செய்துதான் பிரேஸ்லெட்டை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால், உள்நோயாளியாக அவரை அனுமதித்து உள்ளனர்.

The post போலீஸ் விசாரணைக்கு பயந்து பிரேஸ்லெட் விழுங்கிய ரவுடி appeared first on Dinakaran.

Read Entire Article