போலியோ ஒழிப்பு உலக சாதனை நிகழ்ச்சி

3 weeks ago 6

 

திருச்சி. அக்.29: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் ஒரே இடத்தில் கூடி போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் நாள் சர்வதேச போலியோ ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வுக்காக மேலகல்கண்டார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளோடு சேர்ந்து மாநகராட்சி மற்றும் அங்கன்வாடி மாணவ மாணவிகள் 130 பேர் இணைந்து போலியோ ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தலைமையாசிரியர் சற்குணன் தலைமையில் அனைத்து மாணவ-மாணவிகளும் போலியோ ஒழிப்பு இலட்சினை முன் போலியோ சொட்டு மருந்து அடையாள அட்டையை உயர்த்திப் பிடித்து போலியோ ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வை ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக்ஆப் ரெகார்ட்ஸ் என்கின்ற சாதனை புத்தகம் உலக சாதனையாக நேற்று அங்கீகரித்து அதற்குரிய சான்று பத்திரத்தையும், பதக்கத்தையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கியது. சாதனை நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி அனைத்து ஆசிரிய பெருமக்களும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பீபி மற்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் அங்கன்வாடி ஆசிரியர்கள் என அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

The post போலியோ ஒழிப்பு உலக சாதனை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article