பிரேசிலா,
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை பிரேசில் வகித்து வருகிறது.
இதனிடையே, ஜி20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டின் டியோடி ஜெனிரோ நகரில் நேற்று தொடங்கியது. இந்த உச்சிமாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சமூக உள்ளடக்கம் மற்றும் பட்டினி, வறுமைக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடப்பு ஜி20 உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, போரால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது, உலகில் நடைபெற்றுவரும் போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தெற்கு நாடுகளுக்கு முக்கியத்துவம் அந்நாடுகள் சந்திக்கும் சவால்களை மனதில் வைத்து செயல்பட்டால் மட்டுமே நமது ஆலோசனைகள் வெற்றிபெறும்' என்றார்.