போதையில் ஆட்டோ சாகசம் தட்டிக்கேட்டவருக்கு வெட்டு

3 months ago 19

பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் சாலையில் நேற்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் ஒரு ஆட்டோ சென்றுள்ளது. இதனை, போரூரை சேர்ந்த கவுதம் (30) தட்டிக் கேட்டபோது, ஆட்டோவில் இருந்து இறங்கிய இருவர், கவுதமை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் காயமடைந்த கவுதமை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், பிரபல ரவுடிகளான போரூரை சேர்ந்த கார்த்திக் (எ) ஆட்டோ கார்த்திக் (25), அசோக் (27) என தெரியவந்தது.
இவர்கள் இருவரும் போதையில் ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்களை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

The post போதையில் ஆட்டோ சாகசம் தட்டிக்கேட்டவருக்கு வெட்டு appeared first on Dinakaran.

Read Entire Article