போதையில் ஆட்டோ ஓட்டி விபத்து போக்குவரத்து காவலரை தாக்கிய ரவுடி கைது

2 months ago 16

பெரம்பூர்: பெரம்பூர் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மாமல்லன் (58). இவர் நேற்று முன்தினம் காலை அகரம் சந்திப்பில் பணியில் இருந்தபோது ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அப்போது முன்னால் சென்ற பைக் மீது ஆட்டோ மோதி நிற்காமல் சென்றது. உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாமல்லன் உள்ளிட்ட போலீசார் தங்களது பைக்குகளில் ஆட்டோவை துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது ஆட்டோவில் இருந்தவர் போதையில் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் மாமல்லனை கீழே தள்ளினார். இதுபற்றி திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலன போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆட்டோவில் இருந்தவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் பெரம்பூர் எஸ்எஸ்வி கோயில் தெருவைச் சேர்ந்த அப்பு (எ) அமர்நாத் (29) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ளதும், சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போதையில் ஆட்டோ ஓட்டி விபத்து போக்குவரத்து காவலரை தாக்கிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Read Entire Article