போதைப்பொருள் விவகாரம்: சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு

3 hours ago 2

சென்னை,

சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், போதைப்பொருளுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், போதையில்லா தமிழ்நாடு என்ற செயலி உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதாக கருத்து தெரிவித்தனர். மேலும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைப்பதாகவும், இதனை கட்டுபடுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சட்ட பணிகள் ஆணையக் குழுவிற்கு நிதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த கடைகளும் அமைக்கக் கூடாது எனவும், போதைப்பொருளை கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read Entire Article