புதுடெல்லி,
ரூ.900 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
ஒரே நாளில் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான பெரிய முன்னேற்றங்கள், போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்க மோடி அரசின் அசைக்க முடியாத உறுதியை எடுத்துக்காட்டுகிறது. டெல்லியில் உள்ள ஒரு கூரியர் மையத்தில் சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு இந்த மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான எங்கள் வேட்டை தொடரும் என பதிவிட்டுள்ளார். இன்று குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பிடிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.