போதைப்பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: தேனி கலெக்டர் எச்சரிக்கை

3 months ago 21

 

தேனி, அக். 4: தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தேனி மாவட்டத்தில் மது, போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், வணிகள வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மாணவர் விடுதிகள் ஆகியவற்றிற்கு முதல் முறை அபராதமாக ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும். மேலும், விதிகளை மீறி செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 வீதம் அபராதமும் சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கடைகள், வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மாணவர் விடுதிகள் ஆகியவற்றில் தினசரி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post போதைப்பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை: தேனி கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article