சென்னை: போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை கைப்பற்றியும், கடத்தும் கும்பல்களின் தொடர்புகளை துண்டித்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று பாரட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவலில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை செய்தலை கண்டுப்பிடித்து தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நந்தம்பாக்கத்தில் அருண் (40), மெகலன் (42), நைஜிரியா நாட்டை சேர்ந்த ஜான் எஸி (39) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைன், ரூ.1 லட்சம், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பிறகு 3 பேர் மீதும் புனித தோமையார்மலை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேற்கண்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் அரசின் “போதையில்லா தமிழகம்“ வழிகாட்டுதலின்படி முதல் முறையாக அரசு பொது மருத்துவமனையில் உள்ள மத்திய உயிர் வேதியியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் சித்தார்த் மற்றும் பிளம்மிங் பிரான்சிஸ் போதை பொருட்கள் பயன்படுத்தி இருந்தது அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் கடத்துதல், விற்பனை செய்தல் தொடர்பாக சென்னை பெருநகர காவல் தனிப்படை போலீசார் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வந்து குற்றசெயல்களில் தொடர்புடையவர்களை கைது செய்தும், போதைப் பொருட்களை கைப்பற்றியும், போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை கைப்பற்றியும், போதைப்பொருட்கள் கடத்தும் கும்பல்களின் தொடர்புகளை துண்டித்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாரை காவல் ஆணையர் அருண், வெகுவாக பாரட்டினார். போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post போதைப்பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படை: கமிஷனர் அருண் பாராட்டு appeared first on Dinakaran.