போதை மீட்பு மையங்கள், மறுவாழ்வு மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அவர்களைக் கையாளுதல் குறித்த வழிகாட்டுதல்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதில் கூறியிருப்பதாவது: அதிக மது, போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை, அதில் இருந்து மீட்க, பாதிப்பின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். முதலில், அவர்களுக்கு உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் போதை பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் உடனடி உளவியல் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.