போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவன் கைது

3 weeks ago 7

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக, நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதனால், அவரை சோதனை செய்தபோது, 25 போதை மாத்திரைகள் இருந்தன. விசாரணையில், அயனாவரத்தை சேர்ந்த முகமது ரோஷன் (28) என்பதும், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருவதும் தெரிய வந்தது. இவர், போதை மாத்திரைகளை வாங்கி, தனது நண்பர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article