போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

4 hours ago 2

திருவெறும்பூர், ஏப்.24: திருச்சி எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் வழிகாட்டுதலின்படி திருவெறும்பூர் அருகே காட்டுர் பகுதியில் உள்ள கல்லூரி அருகே, இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை நேற்று முன்தினம் மாலை சோதனை செய்தனர். அப்போது, 2 நபர்கள் போலீசாரை கண்டுஓட முயன்றபோது, அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், திருச்சி தில்லை நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த வீரராஜ் மகன் ஹரிஸ்குமார் (30) உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்த செல்வம் மகன் ராமர் (எ) ராகேஷ் (31) என தெரியவந்தது. இந்நிலையில் ஹரிஸ்குமார் என்பவனை சோதனை செய்ததில் 16 போதை மாத்திரைகள், இரண்டு கஞ்சா பொட்டலமும் இருந்தது. மேலும், ஒரு ஆப்பிள் ஐபோனும் இருந்தது.

தொடர்ந்து ராமா (எ) ராகேஷை சோதனை செய்தபோது, ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றும் இருந்தது. மாத்திரைகளை பற்றி விசாரித்தப்போது அது அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் என்றும் விற்பனைக்காக வைத்திருந்ததையும் ஒத்துக்கொண்டான். தொடர்ந்து ஹரிஸ்குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி தீரன் நகரை சேர்ந்த ஜெகநாதன் மகன் ரங்க சுரேந்திரன் (33) என தெரியவந்தது. மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மத்திப்புள்ள போதை மாத்திரைகள், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, இரண்டு எடை போடும் எந்திரம், விலை உயர்ந்த 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

The post போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article