போதை பொருட்கள் அடங்கிய சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்யாறில் பெட்டி கடைகளில் சோதனை

1 month ago 15

செய்யாறு, செப். 29: செய்யாறில் பெட்டி கடைகளில் போதை பொருட்கள் அடங்கிய சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் போதை கலந்த சாக்லெட் மற்றும் மிட்டாய் வகைகள், ஆன்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், செய்யாறு புறவழிச் சாலையில் அமைந்துள்ள கடைகளில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகிறதா என செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா ஆய்வு செய்தார். ஆய்வின்போது செய்யாறு புறவழிச்சாலையில் அமைந்துள்ள கடைகளில் வாட்டர் பாட்டில்கள், டம்ளர் மற்றும் மது அருந்துவதற்கு தேவையான பொருட்களை விற்கக் கூடாது எனவும், கடைக்குள்ளே மது அருந்த அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது கோட்ட கலால் அலுவலர் எஸ்.முரளி, தனி வருவாய் ஆய்வாளர்கள் ராஜசேகரன், பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

The post போதை பொருட்கள் அடங்கிய சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்யாறில் பெட்டி கடைகளில் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article