போதை சாக்லேட் கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி கைது

1 week ago 6

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள புன்னைக்காமுகள் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ரயீஸ்(வயது20), பிரபல ரவுடி. இவர் மீது திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் முகம்மது ரயீஸ், பெற்றோருடன் வசித்து வந்த 13 வயது பள்ளி மாணவிக்கு எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் கலந்த சாக்லேட் கொடுத்து மயக்கி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர், அவரிடம் கேட்டனர். அப்போது சிறுமி நடந்தவற்றை கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பூஜப்புரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி முகம்மது ரயீசை கைது செய்தனர். பின்னர் அவரை திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Read Entire Article