போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்; கடலூர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு: நடிகர் தாமு சிறப்புரை

3 months ago 20

கடலூர்: கடலூரில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் கடலூர் மாவட்ட காவல்துறையின் கல்வியில் காவல்துறை இணைந்து நடத்திய ‘போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்’ கல்லூரி மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான போதை ஒழிப்பு தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது.கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் தலைமை தாங்கினார். டிஎஸ்பி சபியுல்லா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கடலூர் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனு ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாஸ்கரன் முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் சீடர் நடிகர் தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ரோட்டரி மண்டலம் 25 துணை ஆளுநர் வெங்கடேசன் நன்றி கூறினார். மாணவர்களுக்கான போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. மாவட்ட முழுவதும் இருந்து மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

The post போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்; கடலூர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு: நடிகர் தாமு சிறப்புரை appeared first on Dinakaran.

Read Entire Article