"போட்" படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 months ago 28

சென்னை,

இயக்குனர் சிம்புதேவன் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார்.

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபு மண்டேலா படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சிம்பு தேவன் இயக்கத்தில் 'போட்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் யோகி பாபுவுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கவுரி ஜி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

"போட்" படம் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஒரு படகில் பயணிக்கும் 10 வித்தியாசமான குணாம்சம் கொண்ட மனிதர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 2 ம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்த படம் இப்போது அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இதுபற்றி பகிர்ந்துள்ள இயக்குனர் சிம்புதேவன் "உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு எங்களது "போட்" திரைப்படம் வருகிற அக்டோபர் 1 செவ்வாய்க்கிழமை அமேசான் பிரைமில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து மகிழவும் " எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு எங்களது "போட்" திரைப்படம் வருகிற அக்டோபர் 1 செவ்வாய்க்கிழமை அமேசான் பிரைமில் (prime video)வெளியாகிறது. அனைவரும் பார்த்து மகிழவும் @iyogibabu @maaliandmaanvi @Madumkeshprem @SakthiFilmFctry @sakthivelan_b @Gourayy @PrimeVideoIN @onlynikil pic.twitter.com/wjpQHmuK02

— Chimbu Deven (@chimbu_deven) September 28, 2024
Read Entire Article