அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் அஷ்டலட்சுமிகள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், கிழக்கு இந்தியாவில் இருந்துதான்சூரியன் உதயமாகிறது என்றார்.
இது நாட்டின் உறுதிப்பாட்டிற்கு புதிய ஆற்றலைக் கொடுக்குகிறது என்றும் மோடி கூறினார். தொடர்ந்து போடோலாந்தின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மோடி முன்னிலையில் பகுரும்பா என்ற நாட்டுப்புற நடன நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது சரிண்டா என்ற சரம் கட்டப்பட்ட இசைக் கருவி ஒன்றை பிரதமர் மோடி வாசித்து மகிழ்ந்தார்.