தேனி, அக். 18: போடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தேனி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை போடியில் நாளை(19ம்தேதி) நடத்துகிறது. இம்முகாம் போடியில் உள்ள சிபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்க உள்ளது.
இம்முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன்பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, மற்றும் இதர கல்வித் தகுதிகளுடைய அனைவரும் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் பணிவாய்ப்பு பெற்று பயனடையலாம். இம்முகாமில் பங்கேற்கும் வேலைநாடுநர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற லிங்க் மூலம் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
The post போடியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.