போக்குவரத்துக் கழகத்தின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு

4 months ago 16

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் இன்று (டிசம்பர் 10) மாலை இந்திய கணக்கு தணிக்கை துறையினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சிஏஜி அறிக்கையை முதன்மை கணக்காய்வு துறை தலைவர் ஜெய்சங்கர் வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்களில் முக்கியமானவற்றை இங்கே காணலாம்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் மொத்த கடன் ரூ. 21,980 கோடியாக அதிகரிப்பு; 2017ஆம் ஆண்டு ரூ.6,467 கோடியாக இருந்த கடன் 3 மடங்கு அதிகரித்துள்ளது கர்நாடகா, கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் செலவீனம் 55.20 சதவீதம் முதல் 63.55 சதவீதம் வரை உள்ளது.

டிரான்ஸ்பார்மருக்கான டெண்டரில் கட்டாய கட்டண விதியை பின்பற்றாத காரணத்தால் 57,06 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்களை வேறு பணிக்கு அனுப்பியதால் 495 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மின்னணு ஏல செயல்முறைக்கான இலவச இணைய முகப்பை பயன்படுத்தாத காரணத்தால் 17.82 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article