பொறியியல் படிப்புகளுக்கு 7-ம் தேதி முதல் விண்ணப்பம்

3 hours ago 4

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். இந்த சூழலில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் (மே 7ம் தேதி) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி உயர் கல்வி அமைச்சர் கோவி செழியன், 07-05-2025 அன்று காலை 10 மணிக்கு விண்ணப்பப் பதிவைத் தொடங்கி வைக்க உள்ளார். ஆன்லைன் மூலமாக ( https://www.tneaonline.org.) மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article