பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றலாம்

2 days ago 2

நெல்லை, நவ. 22: ரேஷன் கடைகளில் அத்யாவசியப் பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தை விட்டுக் கொடுப்பது தொடர்பாக உணவுத்துறையின் வலைதளத்தின் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பித்து குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றலாம் appeared first on Dinakaran.

Read Entire Article