பொய்யான வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி அழித்து விட்டார்: காங்கிரஸ் கடும் தாக்கு

2 weeks ago 4

புதுடெல்லி: “பொய்யான வெற்று வாக்குறுதிகளை கொடுப்பதன் மூலம் பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி அழித்து விட்டார்” என காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. “ஒருபோதும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் தற்போது மக்கள் முன் மிக மோசமாக அம்பலப்பட்டு நிற்கிறது” என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பிரதமர் மோடி நேற்று முன்தினம் விமர்சித்திருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி தன் எக்ஸ் பதிவில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.  பிரியங்கா காந்தி தன் எக்ஸ் தள பதிவில், “ஆயிரம் ஆண்டுகால கலாச்சாரத்தின் அடிப்படை உண்மையாக இருக்கும் நாட்டில் உயர்ந்த பதவியில் இருப்பவர் பொய்களை நாடக்கூடாது. நாட்டு மக்கள் முன் தனது வார்த்தைகளுக்கு இனி எந்த மதிப்பும் இல்லை என்பதை மோடி புரிந்து கொண்டார்.

100 நாள் வேலை உறுதி திட்டம், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள், 100 பொலிவுறு நகரங்கள், கருப்பு பணத்தை மீட்பது, அதிகரிக்கும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயை கொண்டு வருவது, நல்ல நாள்களை கொண்டு வருவோம் என்றது இவை அனைத்தும் பொய் வாக்குறுதிகள் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. 140 கோடி மக்களுக்கு மீண்டும், மீண்டும் பொய்யான வெற்று வாக்குறுதிகளை கொடுத்து பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி அழித்து விட்டார்” என பதிவிட்டுள்ளார்.

* கார்கே குற்றச்சாட்டு
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “ஒன்றிய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை ஒன்றிய அரசு பறித்து வருகிறது. சமூகநீதிக்கான போராட்டத்தை கேலி கூத்தாக்கி வருகிறது. ஆனால் அவர்கள் பொதுநலன் பற்றி பிறருக்கு பாடம் கற்பிக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

The post பொய்யான வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி அழித்து விட்டார்: காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article