பொன்னேரி அருகே உப்பளம் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு

1 week ago 4

 

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சிறுபழவேற்காடு கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய உப்பு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இப்பணிகள் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அப்பகுதிக்குச் சென்று பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்ப்பு நீராக மாறி வருவதாகவும், இங்கு உப்பளம் அமைப்பதால் மேலும் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், குடிநீர் பருகுவதற்கு லாயக்கற்ற நிலையில் மாறி, அருகிலுள்ள விவசாய நிலங்களும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post பொன்னேரி அருகே உப்பளம் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article