பொன்னமராவதியில் தராசுகளுக்கான முத்திரையிடும் பணி

2 months ago 13

பொன்னமராவதி, டிச.19: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தராசுகளுக்கான முத்திரையிடும் பணி தொடங்கப்பட்டது. இந்த முகாமில் வர்த்தகர்கள் தங்கள் நிறுவனங்களின் தராசுகளை கொண்டுவந்து முத்திரையிட்டு பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொன்னமராவதி வர்த்தகர் கழக மஹாலில் டி கிளாஸ் தராசுகளுக்கான முத்திரையிடும் முகாம் தொடங்கப்பட்டது. மாவட்ட முத்திரை ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் தராசுகளுக்கு முத்திரையிடும் பணியினை மேற்கொண்டனர். இதில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பழனியப்பன், செயலாளர் முகமது அப்துல்லா, பொருளாளர் ராமஜெயம், துணைத் தலைவர் ராமசாமி, துணைச்செயலர் சிவநேசன், மக்கள் தொடர்பு அலுவலர் மாணிக்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பொன்னமராவதி மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய தராசுகளுக்கு அரசு முத்திரையிட்டு ரசீதுகளை பெற்றுச் சென்றனர். தொடர்ந்து இந்தமுகாம் நேற்று முதல் மூன்று தினங்களுக்கு பொன்னமராவதி வர்த்தகர் கழக மஹாலில் நடைபெறுகின்றது. இந்த வாய்ப்பினை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வர்த்தகர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post பொன்னமராவதியில் தராசுகளுக்கான முத்திரையிடும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article